கலெக்டர் கார் முன்பு அமர்ந்து பொதுமக்கள் தர்ணா; விழுப்புரம் அருகே பரபரப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
21 Sep 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 21 Sep 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

கலெக்டர் கார் முன்பு அமர்ந்து பொதுமக்கள் தர்ணா; விழுப்புரம் அருகே பரபரப்பு

கலெக்டர் கார் முன்பு அமர்ந்து பொதுமக்கள் தர்ணா; விழுப்புரம் அருகே பரபரப்பு

விழுப்புரம் அருகே திருவக்கரை – பெரும்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் கல்குவாரிகளில் இருந்து அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் பாதுகாப்பற்ற வகையில் லாரிகள் இயக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கனரக லாரிகளின் இயக்கத்தால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும், பள்ளி நேரங்களில் இதுபோன்ற லாரிகளை இயக்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பெரும்பாக்கம் பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக தங்களது கோரிக்கையை முன்வைக்க, இன்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் வந்தனர். அப்போது, மாவட்ட கலெக்டரின் கார் முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் கார் முன்பு அமர்ந்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.