Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 30 அக்டோபர் 2026 | 13 ஐப்பசி பராபவ வருடம்

‘ஓம்’ படத்தின் கதை ஒரே பாகத்தில் முடியும்! – இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி

‘ஓம்’ படத்தின் கதை ஒரே பாகத்தில் முடியும்! – இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘ஓம் – சாப்டர் 1’ திரைப்படத்தின் கதை முதல் அத்தியாயத்திலேயே முழுமையடையும் என்றும், இதற்குத் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் வெளியாகாது என்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார். ‘அமரன்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, தற்போது தனுஷின் 55-வது படமான ‘ஓம் – சாப்டர் 1’ படத்தை இயக்கி வருகிறார். வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. அதிரடி ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் ஸ்ரீலீலா, சாய் பல்லவி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் தமிழ்ப் படத்தில் நடிப்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முதலில் அக்டோபர் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த ‘ஓம்’ படத்தின் வெளியீடு பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement
தற்போது நவம்பர் 20-ம் தேதி படம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இதற்கிடையே, சமீபத்திய பேட்டி ஒன்றில் படத்தின் கதை குறித்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி விளக்கம் அளித்துள்ளார். படத்தின் தலைப்பில் ‘சாப்டர் 1’ என இடம்பெற்றுள்ளதால், இதற்குப் பிறகு அடுத்த பாகம் வெளியாகுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இதற்குப் பதிலளித்த அவர், தலைப்பில் முதல் அத்தியாயம் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதை வைத்து இரண்டாம் பாகம் வரும் எனக் கருத வேண்டாம் என்றும், பல பாகங்களாகத் தொடரும் வகையில் இப்படத்தின் கதை அமைக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், முதல் அத்தியாயத்திலேயே கதையின் முடிவு முழுமையாக இடம்பெறும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அதேபோல், இப்படத்தில் மம்முட்டி ஏற்று நடித்துள்ள கதாபாத்திரம் வழக்கமான தாதா கதாபாத்திரத்தைப் போன்று இருக்காது என்றும் இயக்குநர் குறிப்பிட்டுள்ளார். ராஜ்குமார் பெரியசாமியின் இந்த விளக்கங்கள், தனுஷ் நடிக்கும் ‘ஓம் – சாப்டர் 1’ திரைப்படம் குறித்த ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளன.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு