Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 06 அக்டோபர் 2026 | 20 புரட்டாசி பராபவ வருடம்

ஓணம் எதிரொலி.. விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு!

ஓணம் எதிரொலி.. விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு!

கேரளாவின் முக்கிய பண்டிகையான ஓணம், தொடர்ந்து 10 நாட்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் திருவோணம் ஆகஸ்ட் 26-ம் தேதி புதன்கிழமை வருகிறது. இதையொட்டி, சென்னையில் வசித்து வரும் கேரள மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். அவர்களின் பயணத்துக்காக சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் விமானங்களின் கட்டணம் கணிசமாக உயர்ந்துள்ளது.

Advertisement
சென்னை-கொச்சி வழித்தடத்தில் வழக்கமாக ரூ.5,336-க்கு இருந்த விமானக் கட்டணம் தற்போது ரூ.14,843 ஆக அதிகரித்துள்ளது.இதேபோல், சென்னை-திருவனந்தபுரம் விமானக் கட்டணம் வழக்கமாக ரூ.5,853 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.14,700 ஆக உயர்ந்துள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,675
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு