ஓணம் எதிரொலி.. விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு!
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
22 Aug 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 22 Aug 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஓணம் எதிரொலி.. விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு!

ஓணம் எதிரொலி.. விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு!

கேரளாவின் முக்கிய பண்டிகையான ஓணம், தொடர்ந்து 10 நாட்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் திருவோணம் ஆகஸ்ட் 26-ம் தேதி புதன்கிழமை வருகிறது. இதையொட்டி, சென்னையில் வசித்து வரும் கேரள மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். அவர்களின் பயணத்துக்காக சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் விமானங்களின் கட்டணம் கணிசமாக உயர்ந்துள்ளது. சென்னை-கொச்சி வழித்தடத்தில் வழக்கமாக ரூ.5,336-க்கு இருந்த விமானக் கட்டணம் தற்போது ரூ.14,843 ஆக அதிகரித்துள்ளது.இதேபோல், சென்னை-திருவனந்தபுரம் விமானக் கட்டணம் வழக்கமாக ரூ.5,853 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.14,700 ஆக உயர்ந்துள்ளது.