Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
செவ்வாய் | 08 செப்டம்பர் 2026 | 23 ஆவணி பராபவ வருடம்

ஒரே நாளில் 2.17 லட்சம் டன் சரக்குகள் கையாள்வு: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை

ஒரே நாளில் 2.17 லட்சம் டன் சரக்குகள் கையாள்வு: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் ஒரே நாளில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 332 மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது. இதனை துறைமுக ஆணையப் பொறுப்பில் உள்ள சுசாந்தகுமார் புரோஹித் தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் 5-ம் தேதி இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஒரே நாளில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 631 மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டதே வ.உ.சி. துறைமுகத்தின் அதிகபட்ச சாதனையாக இருந்தது.புதிய சாதனை நாளில் 62,466 டன் நிலக்கரி, 49,067 டன் அனல்மின் நிலக்கரி, 20,671 டன் சுண்ணாம்புக்கல், 10,188 டன் கந்தக அமிலம், 5,400 டன் பாமாயில், 1,771 டன் சர்க்கரை ஆகியவை கையாளப்பட்டுள்ளன. இதுதவிர, 774 டன் பொது சரக்குகள், 68 டன் காற்றாலை இறக்கைகள் மற்றும் 66,927 டன் சரக்குப் பெட்டக சரக்குகளும் கையாளப்பட்டுள்ளன.சரக்கு கையாள்வில் தொடர்ந்து வளர்ச்சி 2026 ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் வ.உ.சி. துறைமுகத்தில் 35.35 லட்சம் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. 2025 ஆகஸ்ட் மாதத்தில் கையாளப்பட்ட 32.33 லட்சம் டன் சரக்குகளுடன் ஒப்பிடும்போது, இது 9.36 சதவீத வளர்ச்சியாகும்.மேலும், 2026 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாதங்களில் மொத்தம் 18.27 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.

Advertisement
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 2.10 சதவீத வளர்ச்சியாகும். துறைமுகத்தில் உள்கட்டமைப்பு பணிகள் தீவிரம் வடக்கு சரக்கு தளம் 3-ல் தலா 124 டன் கையாளும் திறன் கொண்ட இரண்டு நகரும் பளுதூக்கிகள் பயன்பாட்டில் உள்ளன. இதனுடன், 1 முதல் 7-ம் எண் வரையிலான சரக்கு தளங்களில் 7 நகரும் பளுதூக்கிகளும் செயல்பட்டு வருகின்றன.எதிர்கால சரக்கு கையாளும் திறனை அதிகரிக்கும் வகையில், 7-ம் எண் சரக்கு தளம் நவீன சரக்குப் பெட்டக முனையமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், 10-ம் எண் சரக்கு தளம் அமைத்தல், வடக்கு சரக்கு தளம் 3-ஐ எந்திரமயமாக்குதல், சுங்கக் கட்டுப்பாட்டுப் பகுதியை 40 ஏக்கர் பரப்பளவுக்கு விரிவுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இந்தப் பணிகள் நிறைவடைந்த பிறகு, வ.உ.சி. துறைமுகம் கிழக்குக் கடற்கரையின் முக்கிய கடல்சார் நுழைவாயிலாக மேலும் வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு