Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 20 அக்டோபர் 2026 | 3 ஐப்பசி பராபவ வருடம்

ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்ணைக் கைது செய்வது பாசிசத்தின் உச்சம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்ணைக் கைது செய்வது பாசிசத்தின் உச்சம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட கார்த்திகா கைது செய்யப்பட்டதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதளப் பதிவில், கார்த்திகாவின் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தல் காலத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை அடிப்படையாகக் கொண்டு, அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தினரின் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான செய்திகள் மீதான கவனத்தைத் திசைதிருப்பவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement
அரசியலில் விமர்சனங்களும் ஜனநாயக வழியிலான போராட்டங்களும் இயல்பானவை என்று குறிப்பிட்டுள்ள உதயநிதி, எதிர்தரப்பில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் கைது செய்வது பாசிசத்தின் வெளிப்பாடு என விமர்சித்துள்ளார். மேலும், ரீல்ஸ் முதல்வர் என விமர்சித்த அவர், பாஜகவின் செயல்பாடுகளைப் பின்பற்றாமல், கார்த்திகாவை விடுதலை செய்யத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,490
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு