Skip to main content
🌤️ —°C
வியாழன் | 20 ஆகஸ்ட் 2026 | 4 ஆவணி பராபவ வருடம்

ஐ.யூ.எம்.எல். மகளிர் அணி முப்பெரும் விழா: அமைச்சர் ஷாஜஹான் பங்கேற்பு

ஐ.யூ.எம்.எல். மகளிர் அணி முப்பெரும் விழா: அமைச்சர் ஷாஜஹான் பங்கேற்பு
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்.) மகளிர் அணி சார்பில் நேற்று முப்பெரும் விழா நடைபெற்றது.இதில் மீலாது நபி விழா கொண்டாட்டம், 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன. மேலும், மாநில மகளிர் அணியின் கீழ் செயல்பட்டு வரும் ‘அயிஷா சென்டரில்’ திறன் பயிற்சியை நிறைவு செய்த பெண்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.விழாவின்போது, மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட பெண்கள், கட்சியின் பொதுச் செயலாளர் முகமது அபூபக்கர் முன்னிலையில் ஐ.யூ.எம்.எல்.
Advertisement
கட்சியில் இணைந்தனர்.ஐ.யூ.எம்.எல். சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் இலவச ஆம்புலன்ஸ் சேவைக்காக, மகளிர் அணி சார்பில் ரூ.1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது.மகளிர் அணி தேசியத் தலைவர் பாத்திமா முசப்பர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஏ.எம். ஷாஜஹான், மகளிர் அணி மாநில பொதுச் செயலாளர் அயிஷா, எம்.பி. நவாஸ்கனி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு உரையாற்றினர்.மேலும், கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு