Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 16 செப்டம்பர் 2026 | 31 ஆவணி பராபவ வருடம்

ஐசிஎப் புதிய பொது மேலாளராக மனிஷ் அகர்வால் பொறுப்பேற்றார்

ஐசிஎப் புதிய பொது மேலாளராக மனிஷ் அகர்வால் பொறுப்பேற்றார்

சென்னையில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலை (ஐசிஎப்) நிறுவனத்தின் புதிய பொது மேலாளராக மனிஷ் அகர்வால் இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார்.இதுவரை ஐசிஎப் பொது மேலாளராக இருந்த யு. சுப்பா ராவ், தெற்கு ரெயில்வேயின் புதிய பொது மேலாளராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பொறுப்பை மனிஷ் அகர்வால் ஏற்றுள்ளார்.1989-ஆம் ஆண்டு இந்திய ரெயில்வே மெக்கானிக்கல் இன்ஜினியர்ஸ் (IRSME) பிரிவில் சேர்ந்த மனிஷ் அகர்வால், ரெயில்வே நிர்வாகத்தில் 35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட மூத்த அதிகாரி.

Advertisement
தனது பணிக்காலத்தில் பல்வேறு முக்கிய நிர்வாகப் பொறுப்புகளை வகித்துள்ளார்.ஐசிஎப் பொது மேலாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, ரெயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) நிறுவனத்தில் முதன்மை செயல் இயக்குநர் (மெக்கானிக்கல்) பதவியில் பணியாற்றினார். மேலும், திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளராக (DRM) செயல்பட்ட அனுபவமும் அவருக்கு உள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு