ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஏர்வாடியை அடுத்த கீழக்கரை காட்டுப்பகுதியில் உள்ள புதருக்குள் இரண்டு பேரின் சடலங்கள் கிடந்துள்ளன. இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் ஏர்வாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடல்களையும் மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
Advertisement
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் மற்றும் கோபி என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இருவரையும் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படும் மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.