பிரபல நடிகை சோபிதா துலிபாலா, திருமண வாழ்க்கை மற்றும் குடும்பம் குறித்த தனது விருப்பங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார். அவரது கருத்துகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றன. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாக சைதன்யாவைத் திருமணம் செய்துகொண்ட சோபிதா துலிபாலா, சமீபத்திய பேட்டி ஒன்றில் குடும்ப வாழ்க்கை குறித்த தனது எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார். அப்போது பேசிய அவர், குடும்ப வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்ற விருப்பம் தனக்கு எப்போதும் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
Advertisement
அதேநேரத்தில், அது தொடர்பாக அதிகமாகச் சிந்தித்துக் கவலைப்படுவதில்லை என்றும் தெரிவித்தார். மேலும், வாழ்க்கையில் நடக்க வேண்டிய விஷயங்கள் அனைத்தும் உரிய நேரத்தில் இயல்பாகவே நடைபெறும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் சோபிதா கூறியுள்ளார். குடும்ப வாழ்க்கை குறித்த அவரது இந்தப் பார்வை தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.