Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 31 அக்டோபர் 2026 | 14 ஐப்பசி பராபவ வருடம்

எனது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதா எனத் தெரியவில்லை: ஜேம்ஸ் ஆண்டர்சன் வேதனை

எனது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதா எனத் தெரியவில்லை: ஜேம்ஸ் ஆண்டர்சன் வேதனை

இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன், லங்காஷயர் கவுண்டி அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், தனது கிரிக்கெட் எதிர்காலம் குறித்த ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 25 ஆண்டுகளாகத் தனது கிரிக்கெட் பயணத்தில் ஆதரவளித்த லங்காஷயர் அணிக்காகவே விளையாடி, அதே அணியில் தனது ஓய்வையும் அறிவிக்க வேண்டும் என்பதே தனது விருப்பமாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த ஆசை நிறைவேறவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார். 44 வயதான ஆண்டர்சன், நடப்பு சீசனில் லங்காஷயர் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றிருந்தார். கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டிகளில் சிறப்பாகப் பந்துவீசி 50 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இருப்பினும், புள்ளிப்பட்டியலில் அந்த அணி டிவிஷன் 2-ல் இரண்டாவது கடைசி இடத்தையே பிடித்தது. இந்தச் சூழலில், 2027ஆம் ஆண்டுக்கான வீரர்கள் ஒப்பந்தத்தில் ஆண்டர்சனுக்கு இடமளிக்கப் போவதில்லை என்று லங்காஷயர் அணியின் புதிய கிரிக்கெட் இயக்குநர் பால் ஃபார்பிரேஸ் கடந்த மாதம் அவரிடம் தெரிவித்துள்ளார்.

Advertisement
இந்த அறிவிப்பு ஆண்டர்சனுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதுகுறித்து தனது மனநிலையைப் பகிர்ந்துகொண்ட ஆண்டர்சன், தனது கிரிக்கெட் வாழ்க்கையை லங்காஷயர் அணியுடனேயே நிறைவு செய்ய வேண்டும் என்று விரும்பியதாகக் குறிப்பிட்டார். மேலும், “எனது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதா என்பது குறித்து இப்போதைக்கு என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அடுத்து என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்பேன். எனது விருப்பத்தின்படி ஓய்வு பெறுவதற்கு யாராவது ஒரு வாய்ப்பை வழங்கினால் மகிழ்ச்சியாக இருக்கும்” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு