Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 14 ஆகஸ்ட் 2026 | 29 ஆடி பராபவ வருடம்

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த நோலன்... 1 பில்லியன் டாலர் வசூலை கடந்த ‘தி ஒடிஸி’

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த நோலன்... 1 பில்லியன் டாலர் வசூலை கடந்த ‘தி ஒடிஸி’
ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவான ‘தி ஒடிஸி’ திரைப்படம், உலகளவில் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த 17-ந் தேதி வெளியான இப்படம், தற்போது 1 பில்லியன் அமெரிக்க டாலர் வசூல் என்ற மைல்கல்லை கடந்துள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.9,500 கோடியாகும்.கிரேக்க இலக்கியத்தின் புகழ்பெற்ற காவியமான ‘ஒடிசி’யை தழுவி உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் கதை, டிரோஜன் போரில் பங்கேற்ற மன்னன் ஒடிசியஸ் தனது தாய்நாட்டுக்குத் திரும்ப மேற்கொள்ளும் பயணத்தையும், அந்தப் பாதையில் அவர் சந்திக்கும் பல்வேறு சவால்களையும் மையமாகக் கொண்டுள்ளது.சுமார் 250 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,500 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. டாம் ஹாலண்ட், ஆன் ஹாத்வே, ஜெண்டயா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான ‘தி ஒடிஸி’, முதல் வாரத்திலேயே சுமார் 364 மில்லியன் அமெரிக்க டாலர் வசூல் செய்தது.
Advertisement
இந்திய மதிப்பில் இது ரூ.3,500 கோடிக்கும் அதிகமாகும். தொடர்ந்து உலகம் முழுவதும் பல திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக படம் ஓடிவரும் நிலையில், தற்போது 1 பில்லியன் டாலர் வசூலை எட்டியுள்ளது.இதன் மூலம் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘தி டார்க் நைட்’, ‘தி டார்க் நைட் ரைசஸ்’ ஆகிய படங்களின் வரிசையில், 1 பில்லியன் டாலர் வசூலை கடந்த அவரது மற்றொரு படமாக ‘தி ஒடிஸி’ இணைந்துள்ளது.இந்த ஆண்டில் ‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’, ‘டாய் ஸ்டோரி 5’, ‘சூப்பர் மரியோ கேலக்ஸி’ உள்ளிட்ட திரைப்படங்களும் 1 பில்லியன் அமெரிக்க டாலர் வசூல் சாதனையை எட்டியுள்ளன.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு