Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 03 அக்டோபர் 2026 | 17 புரட்டாசி பராபவ வருடம்

ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும் - அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை

ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும் - அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை

மத்திய கிழக்கில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் அமெரிக்கா-ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை. இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் 20 சதவீதம் இந்த கடல்வழிப் பாதையை சார்ந்துள்ளதால், சர்வதேச அளவில் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், பல்வேறு நாடுகள் பொருளாதார பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றன. குறிப்பாக வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகள் இந்த நிலைமையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

Advertisement
எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக அமெரிக்காவிலும் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. இதனிடையே, போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்காவும் ஈரானும் மறைமுக பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், இரு தரப்பினரும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இந்த சூழலில், ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், போர் முடிவடைந்தவுடன் கச்சா எண்ணெய் விலை உடனடியாக சரிவடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,675
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு