Skip to main content
🌤️ —°C
வியாழன் | 30 ஜூலை 2026 | 14 ஆடி பராபவ வருடம்

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் கடுமையான தாக்குதல்

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் கடுமையான தாக்குதல்
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் தீவிரமடைந்தது. உலகின் முக்கிய வர்த்தகக் கடல்வழிகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது. இதன் விளைவாக உலகளவில் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் பல்வேறு நாடுகளின் அழுத்தத்தைத் தொடர்ந்து, அமெரிக்கா தனது தாக்குதல்களை நிறுத்தி, மத்தியஸ்த நாடுகளின் உதவியுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. ஆனால், இந்த மாத தொடக்கத்தில் கட்டுப்பாடுகளை மீறி ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல முயன்ற கப்பல்களை ஈரான் தாக்கியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரித்தது.அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஈரான் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வெள்ளை மாளிகையில் அவரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, ஈரான் மீண்டும் அணு ஆயுதத் திட்டங்களில் ஈடுபட்டு வருவதாகக் கூறி அதற்கான ஆதாரங்களையும் அவர் சமர்ப்பித்ததாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் தாம் உறுதியாக இருப்பதாக டிரம்ப் தெரிவித்தார்.இந்த சந்திப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், ஹார்முஸ் நீரிணையில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க மத்திய கட்டளைக்குச் சொந்தமான போர்க்கப்பல்களை குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. அந்த ஏவுகணைகள் அனைத்தும் வானிலேயே தடுத்து அழிக்கப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.மேலும், ஜோர்டான், சவுதி அரேபியா மற்றும் ஓமனில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களையும் ஈரான் குறிவைத்து தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.
Advertisement
அந்த தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட டிரோன்களும் நடுவானிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், ஈரான் ஆதரவுடன் ஈராக்கிலிருந்து சவுதி அரேபியாவுக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு அமெரிக்காவின் ஆதரவுடன் சவுதி ராணுவம் பதிலடி கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மோதலில் 20 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.ஈரான் மீது திட்டமிட்ட தாக்குதல்களை டிரம்ப் தற்காலிகமாக நிறுத்திய பிறகு, அமெரிக்க ராணுவ இலக்குகளை நோக்கி ஈரான் நடத்திய முதல் தாக்குதல் இதுவாகும். இதனால் வளைகுடா பிராந்தியத்தில் மீண்டும் பாதுகாப்பு கவலைகள் அதிகரித்துள்ளன. ஈரானின் இந்த நடவடிக்கைக்கு கடுமையான பதிலடி வழங்கப்படும் என்று டிரம்ப் ஏற்கனவே எச்சரித்திருந்தார். அந்த எச்சரிக்கைக்கு சில மணி நேரங்களிலேயே, ஈரானின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து அமெரிக்கா புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த நடவடிக்கை மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், தனது இறையாண்மைக்கு எதிரான எந்த நடவடிக்கைக்கும் தகுந்த பதிலடி வழங்கப்படும் என்று எச்சரித்துள்ளது. அமெரிக்கா–ஈரான் மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், மத்திய கிழக்கு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலைமை சர்வதேச எண்ணெய் சந்தை மற்றும் பிராந்திய பாதுகாப்பில் புதிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு