Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
வெள்ளி | 11 செப்டம்பர் 2026 | 26 ஆவணி பராபவ வருடம்

இன்று முதல் 4 நாட்களுக்கு வங்கிச் சேவைகள் பாதிப்பு!

இன்று முதல் 4 நாட்களுக்கு வங்கிச் சேவைகள் பாதிப்பு!

வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக, இன்று முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு வங்கிகளின் நேரடி சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. வங்கி ஊழியர்களுக்கு வாரந்தோறும் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களும் விடுமுறை வழங்க வேண்டும். மேலும், சாதாரண ஊழியர்களிடம் காட்டப்படும் பாரபட்சமான நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் வங்கி ஊழியர் சங்கங்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன. இதனுடன் தொடர் விடுமுறையும் வருவதால், **வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை** என தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது. திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வங்கி விடுமுறை அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக வழங்கப்படும் வங்கி சேவைகளில் பாதிப்பு ஏற்படக்கூடும்.

Advertisement
அதேவேளையில், இணையவழி வங்கி சேவைகள், ஏ.டி.எம். உள்ளிட்ட சில சேவைகள் வழக்கம்போல் செயல்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் தமிழக பொதுச்செயலர் ரோஷன் கார்க்கி கூறுகையில், வங்கி ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதில் உயர் அதிகாரிகள் மற்றும் சாதாரண ஊழியர்களிடையே நிலவும் பாரபட்சத்தை கண்டித்தும், நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தியும் இரண்டு கட்ட வேலைநிறுத்தப் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதன்படி, இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தமும், வரும் 28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 3 நாட்கள் தொடர் வேலைநிறுத்தமும் நடைபெற உள்ளதாக ரோஷன் கார்க்கி கூறினார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு