Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 15 அக்டோபர் 2026 | 29 புரட்டாசி பராபவ வருடம்

இன்று கவர்னர் ஆர்.வி.அர்லேகரை நேரில் சந்திக்கிறார் முதல்வர் விஜய்

இன்று கவர்னர் ஆர்.வி.அர்லேகரை நேரில் சந்திக்கிறார் முதல்வர் விஜய்

தமிழகத்தின் புதிய முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.வி.அர்லேகரை, முதலமைச்சர் விஜய் இன்று (வியாழக்கிழமை) நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார். தமிழக ஆளுநராகப் பொறுப்பு வகித்து வந்த ஆர்.என்.ரவி, கடந்த மார்ச் 5-ஆம் தேதி மேற்கு வங்காள மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, தமிழகத்திற்குப் புதிய ஆளுநர் நியமிக்கப்படாமல் இருந்த நிலையில், கேரள ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவர்தான் முதலமைச்சர் விஜய்க்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக தமிழகத்திற்கு முழுநேர ஆளுநர் இல்லாத சூழல் நீடித்து வந்தது. இதற்கிடையே, ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் கிரண் ரெட்டி தமிழக ஆளுநராக நியமிக்கப்படலாம் என கடந்த ஆகஸ்ட் மாதம் தகவல்கள் வெளியாகின. அப்போது பிரதமர் வெளிநாட்டுப் பயணத்தில் இருந்ததால், அவர் நாடு திரும்பியதும் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

Advertisement
ஆனால், அத்தகைய அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இந்தச் சூழலில், தமிழகம் உள்ளிட்ட ஆறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டார். அதன்படி, தமிழகத்தின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி தமிழகத்திற்கு ஒருநாள் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், இந்த ஆளுநர் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.வி.அர்லேகருக்கு முதலமைச்சர் விஜய் சமூக வலைத்தளம் வாயிலாக ஏற்கெனவே வாழ்த்து தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக, இன்று கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து அவர் வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,515
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு