Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 15 அக்டோபர் 2026 | 29 புரட்டாசி பராபவ வருடம்

இந்த வாய்ப்புக்காக கடந்த 3–4 ஆண்டுகளாக தயாராகி வந்தேன்: யுவராஜ் சிங்

இந்த வாய்ப்புக்காக கடந்த 3–4 ஆண்டுகளாக தயாராகி வந்தேன்: யுவராஜ் சிங்

ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் உதவி மற்றும் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங், இந்தப் புதிய பொறுப்பை ஏற்க ஆவலுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். 44 வயதான யுவராஜ் சிங், இந்திய அணிக்காக 304 ஒருநாள் போட்டிகள், 40 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 58 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். 2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை, 2011-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை ஆகியவற்றை வென்ற இந்திய அணிகளில் அவர் முக்கியப் பங்களிப்பை வழங்கினார். சர்வதேச கிரிக்கெட்டில் நீண்டகால அனுபவம் பெற்ற யுவராஜ் சிங், சுப்மன் கில், அபிஷேக் சர்மா, பிரப்சிம்ரன் சிங் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கும் வழிகாட்டியாக இருந்து வருகிறார். இந்நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணியின் உதவி மற்றும் பேட்டிங் பயிற்சியாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் குறித்து பேசிய யுவராஜ் சிங், டெல்லி அணியின் கிரிக்கெட் இயக்குநர் சவுரவ் கங்குலி தன்னிடம் இந்தப் பொறுப்பை ஏற்க முடியுமா எனக் கேட்டதாகக் கூறினார்.

Advertisement
அதற்குப் பதிலளித்தபோது, கடந்த 25 ஆண்டுகளாக அவருக்கு உதவியாளராகச் செயல்பட்டு வருவதாகவும், இனியும் அதே பணியைத் தொடர்வதில் மகிழ்ச்சி என்றும் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார். மேலும், இந்தப் புதிய பொறுப்புக்காக கடந்த 3 முதல் 4 ஆண்டுகளாகத் தன்னைத் தயார்படுத்தி வந்ததாகவும் யுவராஜ் சிங் கூறினார். இதுவரை தனிப்பட்ட முறையில் வீரர்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் இருந்தாலும், ஒட்டுமொத்த அணியின் செயல்பாடுகளுடன் இணைந்து செயல்படுவது முற்றிலும் மாறுபட்ட அனுபவமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்பார்த்து மிகுந்த உற்சாகத்துடன் இருப்பதாகவும் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,515
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு