ஆம்னி பஸ்களுக்கு அதிரடி செக்! தமிழகம் முழுவதும் 30 சிறப்பு குழுக்கள் களமிறக்கம்
தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட விதிமீறல்களை கட்டுப்படுத்த தமிழக போக்குவரத்து ஆணையரகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி, அக்டோபர் 19-ம் தேதி ஆயுத பூஜை, நவம்பர் 8-ம் தேதி தீபாவளி என அடுத்தடுத்து விடுமுறை மற்றும் பண்டிகை நாட்கள் வர உள்ளன. இதனால் ஆம்னி பஸ்களின் சேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த காலகட்டத்தில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தல், வரி செலுத்தாமல் நிலுவை வைத்திருத்தல், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக சுமைகளை ஏற்றிச் செல்லுதல், உரிய பர்மிட் இன்றி பஸ்களை இயக்குதல் உள்ளிட்ட விதிமீறல்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.இதனை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட உள்ளன.