Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
சனி | 05 செப்டம்பர் 2026 | 20 ஆவணி பராபவ வருடம்

பராமரிப்பு பணி: கோவை - நாகர்கோவில் ரெயில் சேவையில் மாற்றம்

பராமரிப்பு பணி: கோவை - நாகர்கோவில் ரெயில் சேவையில் மாற்றம்

தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்: 16322) குறிப்பிட்ட நாட்களில் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளது. கோவையில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் இந்த ரெயில், இன்று (சனிக்கிழமை) மற்றும் வருகிற 8, 10, 12 ஆகிய தேதிகளில் வழக்கமான பாதையில் இயக்கப்படாது. அதன்படி, கோவை வடக்கு, பீளமேடு, சிங்காநல்லூர், இருகூர், சூலூர் ரோடு, சோமனூர், திருப்பூர், ஊத்துக்குளி, ஈங்கூர், ஈரோடு, பகுர், கொடுமுடி, புகலூர், கரூர் பாளையம், எரியோடு ஆகிய ரெயில் நிலையங்கள் வழியாக இந்த ரெயில் செல்லாது.

Advertisement
இதற்கு பதிலாக, பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில் போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய நிலையங்கள் வழியாக ரெயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு