Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 21 செப்டம்பர் 2026 | 5 புரட்டாசி பராபவ வருடம்

ஆசிய விளையாட்டு: 10 மீட்டர் ஏர் ரைபிளில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கம்

ஆசிய விளையாட்டு: 10 மீட்டர் ஏர் ரைபிளில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கம்

ஜப்பானில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் இந்தியா ஒரே போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கலம் என 2 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய வீரர்கள் ஹிமான்ஷு தில்லான் மற்றும் ருத்ராங்க்ஸ் பாட்டீல் சிறப்பாக செயல்பட்டனர். தங்கப் பதக்கத்துக்கான போட்டியில் ஹிமான்ஷு தில்லான், சீன வீரர் ஷெங்கை எதிர்கொண்டார். இதில் ஷெங் 233.0 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றார். ஹிமான்ஷு தில்லான் 231.0 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வசப்படுத்தினார்.

Advertisement
மற்றொரு இந்திய வீரரான ருத்ராங்க்ஸ் பாட்டீல் 230.9 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். இதற்கு முன்னதாக நடைபெற்ற ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகள் பிரிவிலும் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது. ருத்ராங்க்ஸ் பாட்டீல், பார்த்த் மானே, ஹிமான்ஷு தில்லான் ஆகியோர் இடம்பெற்ற இந்திய அணி 1890.1 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இந்தப் பிரிவில் 1899.0 புள்ளிகளைப் பெற்ற சீனா தங்கப் பதக்கத்தையும், 1841.4 புள்ளிகளுடன் தென்கொரியா வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,270
🥈 Silver ₹260.00
Petrol ₹107.77
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு