ஆசிய விளையாட்டு: 10 மீட்டர் ஏர் ரைபிளில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
21 Sep 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 21 Sep 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஆசிய விளையாட்டு: 10 மீட்டர் ஏர் ரைபிளில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கம்

ஆசிய விளையாட்டு: 10 மீட்டர் ஏர் ரைபிளில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கம்

ஜப்பானில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் இந்தியா ஒரே போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கலம் என 2 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய வீரர்கள் ஹிமான்ஷு தில்லான் மற்றும் ருத்ராங்க்ஸ் பாட்டீல் சிறப்பாக செயல்பட்டனர். தங்கப் பதக்கத்துக்கான போட்டியில் ஹிமான்ஷு தில்லான், சீன வீரர் ஷெங்கை எதிர்கொண்டார். இதில் ஷெங் 233.0 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றார். ஹிமான்ஷு தில்லான் 231.0 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வசப்படுத்தினார். மற்றொரு இந்திய வீரரான ருத்ராங்க்ஸ் பாட்டீல் 230.9 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். இதற்கு முன்னதாக நடைபெற்ற ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகள் பிரிவிலும் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது. ருத்ராங்க்ஸ் பாட்டீல், பார்த்த் மானே, ஹிமான்ஷு தில்லான் ஆகியோர் இடம்பெற்ற இந்திய அணி 1890.1 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இந்தப் பிரிவில் 1899.0 புள்ளிகளைப் பெற்ற சீனா தங்கப் பதக்கத்தையும், 1841.4 புள்ளிகளுடன் தென்கொரியா வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.