Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 14 செப்டம்பர் 2026 | 29 ஆவணி பராபவ வருடம்

ஆகஸ்ட் 14-ல் திரைக்கு வரும் விஷாலின் ‘மகுடம்’.. ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

ஆகஸ்ட் 14-ல் திரைக்கு வரும் விஷாலின் ‘மகுடம்’.. ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

நடிகர் விஷால் நடித்துள்ள ‘மகுடம்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஷால், இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பதுடன், இயக்குநராகவும் அறிமுகமாகிறார். துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தில், நடிகை அஞ்சலி முக்கியமான கதாபாத்திரத்தில் இடம்பெற்றுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளதால் படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.முதலில் இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் தொடங்கப்பட்ட இந்தத் திரைப்படம், படப்பிடிப்பின்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு புதிய திருப்பத்தை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து, படத்தின் இயக்கப் பொறுப்பை விஷால் ஏற்றுக்கொண்டார். கடந்த தீபாவளியன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், “கதை – ரவி அரசு, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் – விஷால்” என்று படத்தின் போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது. சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 99-வது தயாரிப்பாக உருவாகியுள்ள ‘மகுடம்’, விஷாலின் முதல் இயக்குநர் முயற்சியாகவும் அமைந்துள்ளது.இந்தப் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் தொடர்ந்து 17 இரவுகள் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்தக் காட்சிகளின் மேக்கிங் வீடியோவை விஷால் சமீபத்தில் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார்.

Advertisement
அந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.அதேபோல், சமீபத்தில் வெளியான ‘மகுடம்’ டீசரும் படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் உயர்த்தியுள்ளது. இதில் விஷால் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநராக வேண்டும் என்ற தனது 30 ஆண்டுகால கனவு இந்தப் படத்தின் மூலம் நிறைவேறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இப்படத்தின் முதல் பாடலான ‘ரைஸ் ஆப் லிங்கா’ ஏற்கனவே வெளியாகியுள்ளது. மேலும், ‘நச்சிந்தி மச்சானே’ பாடலை ஏகாதசி எழுதியுள்ள நிலையில், மங்லி மற்றும் வேல்முருகன் இணைந்து பாடியுள்ளனர். **‘கலங்காதே’**பாடலுக்கு கருணாகரன் வரிகள் எழுதியிருக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து பாடியுள்ளார்.இந்நிலையில், ‘மகுடம்’ திரைப்படம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.அதே நாளில் சூர்யா நடித்துள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ மற்றும் நயன்தாரா – கவின் இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படங்களும் வெளியாக உள்ளன. இதனால் ஆகஸ்ட் 14-ஆம் தேதி தமிழ் சினிமாவில் முக்கியமான பாக்ஸ் ஆபிஸ் போட்டி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், கேரளாவில் ‘மகுடம்’ திரைப்படத்தை நியூ சூர்யா பிலிம்ஸ் மற்றும் அபிலாஷ் பிள்ளை இணைந்து அதிகாரப்பூர்வமாக விநியோகம் செய்ய உள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு