Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 08 அக்டோபர் 2026 | 22 புரட்டாசி பராபவ வருடம்

அரசு பேருந்து - மண் லாரி நேருக்கு நேர் மோதல்

அரசு பேருந்து - மண் லாரி நேருக்கு நேர் மோதல்

திருநெல்வேலி மாவட்டம் பிரான்சேரி அருகே அரசு பேருந்தும், மண் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் பேருந்து நடத்துநர் உயிரிழந்தார். மேலும், 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். நெல்லை - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் பிரான்சேரி அருகே 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில் வேகமாக வந்த மண் லாரி, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது மோதியது. மோதலில் அரசு பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. பேருந்தில் நடத்துநராக பணியாற்றி வந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஜித் மெல்வின் ஆர்தர் (52) என்பவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Advertisement
பேருந்தில் இருந்த 20-க்கும் மேற்பட்ட பயணிகளும் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். காயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு