Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

அமெரிக்கா முழுவதும் விமானப் புறப்பாட்டுக்கான தடை 4 மணி நேரத்துக்குப் பிறகு நீக்கம்

அமெரிக்கா முழுவதும் விமானப் புறப்பாட்டுக்கான தடை 4 மணி நேரத்துக்குப் பிறகு நீக்கம்

அமெரிக்காவில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையங்களில் ஏற்பட்ட தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, நாடு முழுவதும் விமானங்கள் புறப்படுவதற்கு திடீர் தடை விதிக்கப்பட்டது. சுமார் 4 மணி நேரத்துக்குப் பிறகு இந்தக் கட்டுப்பாடு நீக்கப்பட்டு, விமானச் சேவைகள் படிப்படியாக மீண்டும் தொடங்கியுள்ளன. அமெரிக்காவில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ஒரே நேரத்தில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அதேவேளையில், அமெரிக்காவில் தரையிறங்க வேண்டிய விமானங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், அங்கிருந்து புறப்படுவதற்கு விமானங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. திடீரென விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்குமோ என்ற அச்சமும் பயணிகள் மத்தியில் ஏற்பட்டது. பின்னர், விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையங்களின் தொலைத்தொடர்பு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இந்த நடவடிக்கைக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது.

Advertisement
இந்தப் பிரச்சினையால் ஆயிரக்கணக்கான விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டதுடன், பல விமானங்கள் தாமதமாகவும் இயக்கப்பட்டன. இதனால் விமான நிலையங்களில் காத்திருந்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், சுமார் 4 மணி நேரத்துக்குப் பிறகு விமானங்கள் புறப்படுவதற்கான தடை விலக்கப்பட்டது. இருப்பினும், விமானங்களும் விமானப் பணியாளர்களும் வெவ்வேறு இடங்களில் இருப்பதால் சேவைகள் உடனடியாக முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்ப வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, தகவல் தொடர்பு அமைப்பில் கோளாறு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட ஆய்வில், இந்தச் சம்பவத்தில் சைபர் தாக்குதலுக்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு