Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 14 ஆகஸ்ட் 2026 | 29 ஆடி பராபவ வருடம்

அமலாக்கத்துறை இயக்குநர் ராகுல் நவீன் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு

அமலாக்கத்துறை இயக்குநர் ராகுல் நவீன் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு
அமலாக்கத்துறை இயக்குநர் ராகுல் நவீனின் பதவிக்காலத்தை மத்திய அரசு மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது.கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டு 14-ந் தேதி முதல் அமலாக்கத்துறை இயக்குநராக ராகுல் நவீன் பொறுப்பு வகித்து வருகிறார். அவரது தற்போதைய பதவிக்காலம் ஆகஸ்டு 13-ந் தேதியுடன் நிறைவடைய இருந்தது.இந்நிலையில், மத்திய அரசின் நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழு, ராகுல் நவீனின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளது.
Advertisement
இதன்படி, அவர் 2027-ம் ஆண்டு ஆகஸ்டு 13-ந் தேதி வரை அமலாக்கத்துறை இயக்குநராக தொடர உள்ளார்.ராகுல் நவீனின் பணி ஓய்வு 2027-ம் ஆண்டு ஜூலை 31-ந் தேதி வர உள்ள நிலையில், அதற்கு பின்னரும் அவர் பதவியில் தொடரும் வகையில் இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு