அதிமுகவிலிருந்து விலகி 50-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்
விருதுநகர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் 50-க்கும் மேற்பட்டோர், இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள தி.மு.க. தலைமைக் கழக அலுவலகத்தில், கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.இந்த இணைப்பு நிகழ்வில், விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைத் தலைவர் பூலாங்கால் எம். சித்திக் தலைமையில், மு. ரஜிஸ் அகமத், எம். கோபிநாத், இமாம் அலி உள்ளிட்டோர் தி.மு.க.வில் உறுப்பினர்களாக இணைந்தனர்.
நிகழ்ச்சியில், தி.மு.க.
முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, விருதுநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., விருதுநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், திருச்சுழி தெற்கு ஒன்றியச் செயலாளர் பொன்னுத்தம்பி, திருச்சி வடக்கு ஒன்றியச் செயலாளர் சந்தனபாண்டி மற்றும் காரியாபட்டி நகரச் செயலாளர் ஆர்.கே. செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர்.