Skip to main content
🌤️ —°C
புதன் | 19 ஆகஸ்ட் 2026 | 3 ஆவணி பராபவ வருடம்

விழிஞ்ஞம் துறைமுகத்தில் நேரடி சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி சேவை தொடக்கம்

விழிஞ்ஞம் துறைமுகத்தில் நேரடி சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி சேவை தொடக்கம்
கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தில் இன்று முதல் நேரடி சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சேவைகள் தொடங்கியுள்ளன. இதுவரை வெளிநாடுகளில் இருந்து வரும் சரக்குகளை மற்ற கப்பல்களுக்கு மாற்றி அனுப்பும் சரக்கு மாற்று மையமாக செயல்பட்டு வந்த விழிஞ்ஞம் துறைமுகம், தற்போது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சரக்குகளை நேரடியாகக் கையாளும் வசதியைப் பெற்றுள்ளது.கேரள அரசு மற்றும் அதானி போர்ட்ஸ் இணைந்து உருவாக்கிய இந்த துறைமுகம், இந்தியாவின் முதல் ஆழ்கடல் சரக்கு மாற்று துறைமுகமாகவும், தெற்காசியாவின் முதல் முழுமையான தானியங்கி சரக்கு பெட்டக துறைமுகமாகவும் விளங்குகிறது.
Advertisement
கடந்த 18 மாதங்களில் மட்டும் 20 லட்சம் சரக்கு பெட்டகங்களை துறைமுகம் கையாண்டுள்ளது.நேரடி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சேவை தொடங்கப்பட்டுள்ளதால், சரக்குகளை கையாள்வதற்கான செலவும், நேரமும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளதாக கூறப்படுகிறது.விழிஞ்ஞம் துறைமுகத்தில் நேரடி ஏற்றுமதி - இறக்குமதி சேவையை முதல்-மந்திரி வி.டி. சதீசன் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு