Skip to main content
🌤️ —°C
சனி | 22 ஆகஸ்ட் 2026 | 6 ஆவணி பராபவ வருடம்

“மகாவீர் கர்ணா” படத்தின் டீசர் வெளியானது

“மகாவீர் கர்ணா” படத்தின் டீசர் வெளியானது
ரமேஷ் வர்மா இயக்கத்தில் உருவாகி வரும் ‘மகாவீர் கர்ணா’ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.பென் மூவீஸ், ஸ்ரீ நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆர்வி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படம், இந்திய சினிமாவில் இதுவரை அதிகம் முயற்சிக்கப்படாத ‘ஹைப்ரிட் லைவ்-ஆக்ஷன்’ தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தை ஜெயந்திலால் கடா வழங்குகிறார்.‘ராட்சசன்’, ‘கில்லாடி’ உள்ளிட்ட பல்வேறு வகை திரைப்படங்களை இயக்கிய ரமேஷ் வர்மா, தற்போது மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரமான கர்ணனின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளார்.ஆக்சன், திரில்லர் மற்றும் கமர்ஷியல் திரைப்படங்களில் தனது திறமையை வெளிப்படுத்திய ரமேஷ் வர்மா, ‘மகாவீர் கர்ணா’வில் லைவ்-ஆக்ஷனின் உணர்வுப்பூர்வமான தாக்கத்துடன் நவீன விஷுவல் எபெக்ட்ஸை இணைத்து புதிய திரை அனுபவத்தை உருவாக்க முயன்றுள்ளார். படத்தின் மையக் கதாபாத்திரமாக கர்ணன் தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. குந்திக்கு பிறந்த கர்ணன், அரச குடும்பத்தின் அங்கீகாரத்தைப் பெறாமல் வளர்ந்ததுடன், அடையாளம், நிராகரிப்பு மற்றும் விதி போன்ற பல்வேறு சவால்களை எதிர்கொண்டார். அதேநேரத்தில், தான் நம்பிய மனிதர்கள் மற்றும் கொள்கைகள் மீது அவர் கொண்டிருந்த விசுவாசம் உறுதியானதாக இருந்தது.தான் அளித்த வாக்கைக் காப்பதற்காக எந்தவிதமான விளைவுகளையும் எதிர்கொள்ளத் தயங்காத கர்ணனின் குணமும், அவரது கொடைத்தன்மையும் கதையில் முக்கிய இடம் பெறுகின்றன. இந்த சமரசமற்ற தன்மையே மகாபாரதத்தின் சிக்கலான மற்றும் சோகமான கதாபாத்திரங்களில் ஒருவராக கர்ணனை நிலைநிறுத்துகிறது.வெளியாகியுள்ள டீசரில் வீரர்கள், அரசாட்சிகள், ஆயுதங்கள் மற்றும் பிரம்மாண்டமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
Advertisement
இவற்றைக் கடந்து, தனது வாக்கில் உறுதியாக நிற்கும் கர்ணனின் குணமே முக்கியமாக முன்னிறுத்தப்படுகிறது.கர்ணனை வெறும் புராணக் கதாபாத்திரமாக காட்டாமல், கௌரவம், விசுவாசம், நட்பு, துரோகம், விதி மற்றும் கொடுத்த வாக்கைக் காப்பதற்காக ஒருவர் செலுத்தும் விலை ஆகிய மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட காவியமாக இப்படம் உருவாகியிருப்பதை டீசர் காட்சிகள் வெளிப்படுத்துகின்றன.‘ஹைப்ரிட் லைவ்-ஆக்ஷன்’ அணுகுமுறை மூலம் பிரம்மாண்டமான காட்சிகள் மற்றும் தனித்துவமான சினிமா உலகத்தை உருவாக்குவதில் இயக்குநர் ரமேஷ் வர்மா புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். இந்திய சினிமாவில் அரிதாக பயன்படுத்தப்படும் இந்த முறையின் மூலம் பார்வையாளர்களுக்கு வித்தியாசமான காட்சியனுபவம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ராம்ஜி டாட் ஒளிப்பதிவாளராகவும், பிரவீன் புடி படத்தொகுப்பாளராகவும், ஸ்ரீமணி வசன எழுத்தாளராகவும், ஞானி இசையமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.ரமேஷ் வர்மாவின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய முயற்சிகளில் ஒன்றாக உருவாகி வரும் ‘மகாவீர் கர்ணா’, கர்ணனின் கதையை புதிய தலைமுறை ரசிகர்களுக்கான பிரம்மாண்டமான சினிமா அனுபவமாக வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் டிசம்பர் 4-ம் தேதி உலகம் முழுவதும் பான் இந்தியா முறையில் திரையரங்குகளில் வெளியாகிறது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு