Skip to main content
🌤️ —°C
சனி | 22 ஆகஸ்ட் 2026 | 6 ஆவணி பராபவ வருடம்

அவைக்குறிப்பில் இருந்து நீக்கியதை ‘ரீல்ஸ்’ ஆக வெளியிட்டால் நடவடிக்கை: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் எச்சரிக்கை

அவைக்குறிப்பில் இருந்து நீக்கியதை ‘ரீல்ஸ்’ ஆக வெளியிட்டால் நடவடிக்கை: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் எச்சரிக்கை
சட்டசபை நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பப்படுவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் இடையே சட்டசபையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், சட்டசபையை சபாநாயகர் சிறப்பாக நடத்தி வருவதாகவும், கேள்வி கேட்க தங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். அதேநேரத்தில், ஆளுங்கட்சி அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் பதிலளிக்கும்போது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும், பின்னர் அவை குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பேச்சுகள், சட்டசபை நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பப்படுவதால் சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ ஆக வெளியாகி அதிகமாகப் பகிரப்படுவதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். இதனால், அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதன் நோக்கம் பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.மேலும், சட்டசபையில் தற்போது சில நேரங்களில் பாடல்கள் பாடப்படுவதாகக் கூறிய அவர், “சட்டசபைக்கு வந்திருக்கிறோமா அல்லது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோமா?” என கேள்வி எழுப்பினார். கடந்த காலங்களில் சட்டசபை நிகழ்வுகள் ஏன் நேரலையில் ஒளிபரப்பப்படவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த சபாநாயகர், கருத்துகளுக்கு ஏற்ப பாடல்கள் பாடுவதில் தவறில்லை என்றும், அதனை ‘சூப்பர் சிங்கர்’ என குறிப்பிடுவது அவசியமா என்றும் கேள்வி எழுப்பினார்.தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், சட்டசபை வரலாற்றில் வினா-விடை நேரத்தை முதன்முதலில் தி.மு.க. ஆட்சியில்தான் நேரலையில் ஒளிபரப்பியதாக தெரிவித்தார். தற்போது முழுமையாக நேரலை செய்யப்படுவதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தே தான் சுட்டிக்காட்டுவதாகவும் கூறினார்.சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறுகையில், ஆதாரமின்றி தெரிவிக்கப்படும் கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது சட்டசபையின் நடைமுறை என்றும், அவ்வாறு நீக்கப்பட்ட தகவல்கள் ஊடகங்களில் வெளியிடப்படுவது தொடர்பாக கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Advertisement
இதுகுறித்த புகார்களை உரிமைக்குழுவுக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், சட்டசபையில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காகவே நேரலை செய்யப்படுவதாக தெரிவித்தார். நேரலை ஒளிபரப்பை தி.மு.க. ஆட்சியில் மு.க.ஸ்டாலின் தொடங்கியதாகவும், தற்போது அது முழுமையாகத் தொடர்ந்து வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.இதையடுத்து, ஆதாரமின்றி பேசப்படும் கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது நியாயமான நடைமுறை என சபாநாயகர் மீண்டும் தெரிவித்தார். எதிர்காலத்தில் உறுப்பினர்கள் ஆதாரங்களுடன் பேச வேண்டும் என்றும், அவையின் கண்ணியத்தையும் மக்கள் தங்களுக்கு வழங்கிய பொறுப்பின் மீதான எதிர்பார்ப்பையும் கருத்தில் கொண்டு உரையாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.இந்த நிலையில், அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட கருத்துகளை ‘ரீல்ஸ்’ வடிவில் வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட தகவல்களை எந்த வகையிலும் பயன்படுத்துவது அவையின் மாண்பை பாதிப்பதுடன், சட்ட விதிகளையும் மீறுவதாக அமையும் என்று தெரிவித்தார். இதுதொடர்பாக உரிமை மீறல் நடவடிக்கை கோரி கடிதங்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவை தனது பரிசீலனையில் இருப்பதாகவும் கூறினார்.அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட கருத்துகளை ‘ரீல்ஸ்’ ஆக வெளியிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு