நேபாளத்தில் இருந்து சென்னை திரும்பும் தமிழர்கள்: தமிழ்நாடு அரசு ஏற்பாடு
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர், விமானம் மூலம் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு சென்னை அழைத்து வரப்படுகின்றனர்.
நேபாளத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால் பல்வேறு பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500-ஐ நெருங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து நேபாளம் சென்றவர்களில் 85 பேர் குறித்த தகவல் இதுவரை கிடைக்கவில்லை. அவர்களை விரைந்து மீட்க வேண்டும் என உறவினர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.இதையடுத்து, அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மீட்புப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், வேளாண்மைத்துறை அமைச்சர் வினோத், அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு ஆகியோர் நேற்று டெல்லி சென்றனர்.டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையக் கட்டுப்பாட்டு அறையையும் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். அங்கு நடைபெறும் பணிகள், பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் அழைப்புகள், சேகரிக்கப்படும் தகவல்கள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். மேலும், தூதரக அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினர்.இதுகுறித்து அமைச்சர் ராஜ்மோகன் கூறுகையில், தமிழகத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் மட்டுமே நேபாளம் சென்றிருப்பார்கள் என முதலில் கருதப்பட்டதாகவும், தற்போது ஒன்றுக்கும் மேற்பட்ட குழுக்களைச் சேர்ந்த 100-க்கும் அதிகமானோர் அங்கு சென்றிருப்பது தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்தார்.அவர்களில் 26 பேர் பாதுகாப்பாக இருப்பது தெரியவந்துள்ள போதிலும், அவர்களுடன் தொடர்பு கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும், சிலரை இதுவரை கண்டறிய முடியவில்லை என்றும், மத்திய அரசு மற்றும் நேபாள அரசுடன் இணைந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி, விரைவில் அனைவரையும் மீட்டு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.இதற்கிடையில், கும்பகோணத்தில் இருந்து கைலாஷ் யாத்திரைக்காக நேபாளம் சென்ற 57 பேரில், இதுவரை பாதுகாப்பாக மீட்கப்பட்ட 21 பேர் இன்று இரவு சென்னை வருகின்றனர். காத்மண்டுவில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 3.45 மணிக்கு டெல்லி சென்றடைகிறது. அங்கிருந்து இரவு8மணிக்குஅவர்கள்சென்னைஅழைத்துவரப்படஉள்ளனர்.பின்னர்நாளைஅவரவர்சொந்தஊர்களுக்குஅனுப்பிவைக்கப்படுகன்றனர்.முன்னதாக, நேபாளத்துக்கு சென்று மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க அமைச்சர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டிருந்தார். மீட்கப்பட்ட 21 தமிழர்களையும் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும், தொடர்பு கொள்ள முடியாதவர்களின் நிலையை கண்டறிந்து மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும் அவர் அறிவுறுத்தியிருந்தார்.