துறை சார்ந்த கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்கவில்லை என உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு
சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு உரிய விளக்கம் வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி, தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து, சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.அப்போது அவர் கூறியதாவது:மாணவர் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை. மாணவர் கொலை சம்பவம் தொடர்பாக கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்குப் பதிலளிக்காமல், தி.மு.க.
மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என்றார்.மேலும், எந்தத் துறைக்கு யார் அமைச்சர்கள் என்பது கூட தெளிவாகத் தெரியவில்லை என்றும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் தங்கள் துறைகள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.அனைத்து அமைச்சர்களும் துறை சார்ந்த விவாதங்களில் விளக்கம் அளிக்கத் தவறிவிட்டதாகக் கூறிய அவர், சட்டம்-ஒழுங்கு தொடர்பான அமைச்சரும் இன்று சட்டசபைக்கு வரவில்லை என்று விமர்சித்தார்.