Skip to main content
🌤️ —°C
செவ்வாய் | 18 ஆகஸ்ட் 2026 | 2 ஆவணி பராபவ வருடம்

பிரதமர் மோடி தலைமையில் இந்திய பாதுகாப்புத்துறை புதிய உச்சத்தை எட்டியுள்ளது: நயினார் நாகேந்திரன்

பிரதமர் மோடி தலைமையில் இந்திய பாதுகாப்புத்துறை புதிய உச்சத்தை எட்டியுள்ளது: நயினார் நாகேந்திரன்
பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையும் உறுதியான தலைமையும் காரணமாக, இந்தியாவின் பாதுகாப்புத்துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்று புதிய கட்டத்தை எட்டியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு காலத்தில் பாதுகாப்புத் தளவாடங்களுக்காக பிற நாடுகளைச் சார்ந்திருந்த இந்தியா, தற்போது உலக நாடுகளுக்கே பாதுகாப்பு உபகரணங்களை உற்பத்தி செய்து வழங்கும் வல்லரசாக உருவெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.மேலும், 2013-14 ஆம் ஆண்டில் ரூ.686 கோடியாக இருந்த பாதுகாப்புத்துறை ஏற்றுமதி, தற்போது ரூ.38,424 கோடியாக உயர்ந்திருப்பதாகவும், இது 5,500 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.'இந்தியாவிலேயே தயாரிப்போம்' என்ற திட்டத்தின் மூலம் உள்நாட்டு உற்பத்திக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதே இந்த வளர்ச்சிக்கான முக்கிய காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அதேபோல், கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ரூ.8.75 லட்சம் கோடி மதிப்பிலான ராணுவ நவீனமயமாக்கல் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.தற்போது இந்தியா 80-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பாதுகாப்புத் தளவாடங்களை ஏற்றுமதி செய்து வருவதாகவும், இது வெறும் வணிக வளர்ச்சியாக மட்டுமல்லாமல், தற்காப்புத் துறையில் தன்னிறைவு அடைந்து உலகளாவிய உற்பத்தி மையமாக இந்தியா வளர்ந்திருப்பதற்கான அடையாளமாகவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு