திமுக ஆட்சியில் போதைப்பொருள் மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன; சட்டசபையில் ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு
சட்டசபையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்திருப்பதே பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரிப்பதற்கான முக்கியக் காரணமாக இருப்பதாக குற்றம்சாட்டினார்.2020-க்கு முன்பு தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் இந்த அளவுக்கு இல்லை என்றும், அதன் பரவலுக்குப் பிறகே பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும், திமுக ஆட்சிக் காலத்தில் போதைப்பொருள் பயன்பாடும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார். குறிப்பாக, போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 40 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.தான் கூறும் தகவல்கள் அனைத்தும் காவல்துறை வெளியிட்ட அறிக்கைகளின் அடிப்படையில் கூறப்படுபவையே தவிர, அது தவெக கட்சியின் அறிக்கை அல்ல என்றும் அவர் விளக்கம் அளித்தார்.போதைப்பொருள் பரவலால் மக்கள் திமுகவை நிராகரித்துள்ளதாகக் கூறிய அவர், தவெக ஆட்சியில் போதைப்பொருள் கலாச்சாரத்தை முற்றிலும் ஒழிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.மாணவர் கொலை வழக்கைப் பற்றிக் குறிப்பிடும்போது, காவல்துறையின் அறிக்கையைவிட உயிரிழந்த மாணவரின் தாயின் உணர்வுகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறினார்.
மேலும், எந்தவிதமான அழுத்தத்திற்கும் இடமளிக்காமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆதவ் அர்ஜுனா உறுதியளித்தார்.