Skip to main content
🌤️ —°C
சனி | 01 ஆகஸ்ட் 2026 | 16 ஆடி பராபவ வருடம்

'டாக்ஸிக்' டிரெய்லர் ஆகஸ்ட் 8-ல் வெளியீடு; அதிகாரப்பூர்வ அறிவிப்பால் உற்சாகமான யாஷ் ரசிகர்கள்

'டாக்ஸிக்' டிரெய்லர் ஆகஸ்ட் 8-ல் வெளியீடு; அதிகாரப்பூர்வ அறிவிப்பால் உற்சாகமான யாஷ் ரசிகர்கள்
நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'டாக்ஸிக்' திரைப்படத்தின் டிரெய்லர் வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து, படத்தின் டிரெய்லரை எதிர்பார்த்து ரசிகர்கள் உற்சாகமாக காத்திருக்கின்றனர்.'கே.ஜி.எப்' படங்களின் வெற்றியைத் தொடர்ந்து யாஷ் நடித்துள்ள இந்த படத்தை இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த கேங்ஸ்டர் டிராமா திரைப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி மற்றும் தாரா சுதாரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அண்மையில் வெளியிடப்பட்ட 'லேடீஸ் அண்ட் லேடீஸ்' அறிமுக வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.1940 முதல் 1970 வரை கோவாவில் நடைபெற்றதாகக் கூறப்படும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாபியா கும்பல்களின் பின்னணியை மையமாகக் கொண்டு இந்த ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.சமீபத்தில் வெளியான 'டாக்ஸிக்' டீசர் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதுடன், அதிலிருந்த சில காட்சிகள் தொடர்பாக விமர்சனங்களும் எழுந்தன.
Advertisement
குறிப்பாக, சில காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியதால் அந்த டீசர் பரவலாக பேசப்பட்டது.இந்த திரைப்படம் முதலில் மார்ச் 19-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது ஆகஸ்ட்26,ஆம்தேதிஉலகம்முழுவதும்திரையரங்குகளில்வெளியாகஉள்ளதாகஅறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், திரைப்படத்தின் டிரெய்லர் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் யாஷின் புதிய தோற்றத்தையும், படத்தின் அதிரடி காட்சிகளையும் டிரெய்லரில் காண ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு