Skip to main content
🌤️ —°C
புதன் | 26 ஆகஸ்ட் 2026 | 10 ஆவணி பராபவ வருடம்

சென்னை மாநகராட்சியில் குப்பைகளை தரம் பிரிக்க 40 நாள் சிறப்பு விழிப்புணர்வு

சென்னை மாநகராட்சியில் குப்பைகளை தரம் பிரிக்க 40 நாள் சிறப்பு விழிப்புணர்வு
சென்னை மாநகராட்சியில் பொதுமக்கள் குப்பைகளை முறையாக தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில், **“குப்பையைப் பிரிப்போம் - நாளையை காப்போம்”** என்ற 40 நாள் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக, அடையாறு மண்டலம், வார்டு-179க்கு உட்பட்ட குப்பம் கடற்கரை சாலையில் இன்று நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெற்கு வட்டார துணை ஆணையர் அதாப் ரசூல் பங்கேற்றார். அப்பகுதியில் வீடு வீடாகச் சென்ற அவர், மக்காத குப்பைகளை தனியாக சேகரித்து வழங்குவதற்கான பிரத்யேக பைகள் மற்றும் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். மேலும், வீடுகளின் சுவர்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டன.தமிழ்நாட்டில் திடக்கழிவு மேலாண்மையை சிறப்பாக செயல்படுத்தும் வகையில், குப்பை உருவாகும் இடத்திலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதாரக் கழிவுகள் மற்றும் அபாயகரமான கழிவுகள் என தனித்தனியாகப் பிரித்து சேகரிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.இதன்படி, சென்னை மாநகராட்சி முழுவதும் அறிவியல் முறையிலான திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தூய்மைப் பணிகளுடன், பொதுமக்களிடமும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இந்த முயற்சியின் தொடர்ச்சியாக, தெற்கு வட்டாரத்தில் கடந்த **22.08.2026** அன்று “குப்பையைப் பிரிப்போம் - நாளையை காப்போம்” என்ற 40 நாள் வீடுகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.முதற்கட்டமாக வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய தென் சென்னை மண்டலங்களில் மொத்தம் 50,000 வீடுகளை சென்றடைவது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Advertisement
ஒவ்வொரு மண்டலத்திலும் 10,000 வீடுகள் தேர்வு செய்யப்பட்டு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.மேலும், அதிகளவில் குப்பைகளை உருவாக்கும் நிறுவனங்கள் மற்றும் இடங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக அவர்களுடன் கலந்துரையாடல் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதிக அளவில் குப்பைகளை உருவாக்குபவர்கள் **செப்டம்பர் 1-ம் தேதி முதல் கட்டாயமாக குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும்** என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் அடையாறு மண்டல அலுவலர் காளிதாஸ், செயற்பொறியாளர் ரங்கநாதன், மாநகராட்சி மற்றும் உர்பேசர் அலுவலர்கள், பணியாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு