காமன்வெல்த் 2026: குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனைகள் அடுத்தடுத்து தங்கம் வென்று சாதனை
காமன்வெல்த் விளையாட்டு 2026 தொடரின் குத்துச்சண்டை பிரிவில் இந்தியாவுக்கு ஒரே நாளில் இரண்டு தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. இந்திய வீராங்கனைகள் தங்களது சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.பெண்களுக்கான 54 கிலோ எடைப்பிரிவு இறுதிச் சுற்றில் இந்தியாவின் ப்ரீத்தி பவார், கனடாவைச் சேர்ந்த ஸ்கார்லெட் சவன்னா டெல்காடோவை எதிர்கொண்டு வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் காமன்வெல்த் 2026 குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்கத்தை அவர் பெற்றுத் தந்தார்.இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பெண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஜெய்ஸ்மின் லம்போரியா, வடக்கு அயர்லாந்தின் மைக்கேலா வால்ஷை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.ப்ரீத்தி பவார் மற்றும் ஜெய்ஸ்மின் லம்போரியாவின் வெற்றிகள், காமன்வெல்த் 2026 தொடரில் இந்திய குத்துச்சண்டை அணிக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளன.