Skip to main content
🌤️ —°C
புதன் | 26 ஆகஸ்ட் 2026 | 10 ஆவணி பராபவ வருடம்

'கேரளா' அல்ல... இனி 'கேரளம்' தான் - அரசிதழில் வெளியிட்டது மத்திய அரசு

'கேரளா' அல்ல... இனி 'கேரளம்' தான் - அரசிதழில் வெளியிட்டது  மத்திய அரசு
மாநிலத்தின் பெயரை ‘கேரளா’ என்பதற்குப் பதிலாக ‘கேரளம்’ என மாற்றுவதற்கான இறுதி அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் அரசிதழில் வெளியிட்டுள்ளது.மலையாளத்தில் பாரம்பரியமாக ‘கேரளம்’ என்றே அழைக்கப்பட்டு வரும் நிலையில், மாநிலத்தின் பெயரை அனைத்து மொழிகளிலும் மாற்ற வேண்டும் என கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதனைத் தொடர்ந்து, அரசியலமைப்புச் சட்டத்தின் 3-வது பிரிவின் கீழ் பெயர் மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டதுடன், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும் ஒப்புதல் அளித்தார்.தற்போது மத்திய அரசின் இறுதி அறிவிப்பு வெளியாகியுள்ளதால், இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்து மொழிகளிலும், மத்திய அரசின் அதிகாரப்பூர்வ பதிவுகளிலும் ‘கேரளா’ என்பதற்குப் பதிலாக ‘கேரளம்’ என்ற பெயரே பயன்படுத்தப்படும்.மாநிலத்தின் வரலாறு மற்றும் கலாச்சார அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பெயர் மாற்றம், உலகம் முழுவதும் உள்ள மலையாளிகளிடையே மகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு