Skip to main content
🌤️ —°C
வியாழன் | 20 ஆகஸ்ட் 2026 | 4 ஆவணி பராபவ வருடம்

கட்சி உறுப்பினர் விவரங்களை சேகரிக்க வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதம்: சி.பி.ஐ.(எம்) கண்டனம்

கட்சி உறுப்பினர் விவரங்களை சேகரிக்க வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதம்: சி.பி.ஐ.(எம்) கண்டனம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம், சென்னை­யில் ஆகஸ்ட் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மாநில செயலாளர் பெ.சண்முகம் மற்றும் மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், என்.குணசேகரன், கே.பாலபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குஜிலியம்பாறை வட்டாட்சியர் உத்தரவுக்கு கண்டனம் குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாசாமி, தனது அதிகார வரம்பை மீறி, அந்த தாலுகாவில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் விவரங்களை சேகரிக்க உத்தரவிட்டிருப்பது சட்டவிரோதமானது என சி.பி.ஐ.(எம்) தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக கடந்த ஆகஸ்ட் 18-ந் தேதி ந.க.எண். 2017/2026/அ1 என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், அதன் நகல் மாவட்ட ஆட்சியர், பழனி கோட்டாட்சியர், தலைமையிடத்து துணை ஆட்சியர் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இந்த உத்தரவு குறித்து உயர் அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சி.பி.ஐ.(எம்) வலியுறுத்தியுள்ளது.இந்த உத்தரவைக் கண்டித்து திண்டுக்கல் மாவட்ட சி.பி.ஐ.(எம்) சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், வட்டாட்சியர் அய்யாசாமி பயிற்சியை நிறைவு செய்துவிட்டதாகக் கூறி, அவரை மாவட்ட பயிற்சியில் இருந்து விடுவித்து மாவட்ட ஆட்சியர் ஆகஸ்ட் 18-ந் தேதி பிற்பகலில் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வட்டாட்சியரின் நடவடிக்கைக்கு எதிராக கண்டனங்கள் எழுந்திருந்த நிலையில், மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கை ஜனநாயக உரிமைகளை ஒடுக்கும் செயலுக்கு ஆதரவாக இருப்பதாக சி.பி.ஐ.(எம்) குற்றம்சாட்டியுள்ளது.இந்த விவகாரம் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னரும், ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வரும் சூழலில், வட்டாட்சியரை பயிற்சியில் இருந்து விடுவித்ததாக மாவட்ட ஆட்சியர் அறிவித்திருப்பது, அரசு மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.சட்டவிரோதமான இந்த நடவடிக்கைக்கு வருவாய்த்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் பொறுப்பேற்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசை சி.பி.ஐ.(எம்) மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது. கல்லூரி மாணவர்களின் போராட்ட உரிமையை தடுக்க முயற்சியா? மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் நடத்தும் போராட்டங்களில் பங்கேற்பதை தடுக்கும் வகையில் கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்ட வழிகாட்டுதலுக்கும் சி.பி.ஐ.(எம்) கண்டனம் தெரிவித்துள்ளது.கல்லூரி கல்வி ஆணையர் ஆகஸ்ட் 17-ந் தேதி அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கும் ஒரு உத்தரவை அனுப்பியதாகவும், அதில் பள்ளிக்கல்வி, உயர்கல்வி, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகள் இணைந்து செயல்பட்டு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டங்களில் பங்கேற்பதை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.மேலும், இதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின் விவரங்களை தெரிவிக்குமாறும் கல்லூரி கல்வி ஆணையர் கேட்டிருந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த ஆகஸ்ட் 14-ந் தேதி அரசின் சிறப்பு செயலாளர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட கடிதத்தின் அடிப்படையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், ஜூலை மாத சட்டம்-ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் தமிழகஅரசின்தலைமைச்செயலாளர்டாக்டர்எம்.சாய்குமார்ஐ.ஏ.எஸ்.இதைவலியுறுத்தியதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜனநாயகஇயக்கங்களின்போராட்டங்களைகட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக சி.பி.ஐ.(எம்) குற்றம்சாட்டியுள்ளது.
Advertisement
கல்வி நிறுவனங்களுக்குள் காவல்துறை தலையிடுவதற்கான சூழலை உருவாக்கும் வகையில் இத்தகைய வழிகாட்டுதல்கள் இருப்பதாகவும் அக்கட்சி கூறியுள்ளது.இதுபோன்ற முக்கியமான முடிவுகள் அமைச்சரவைக்கும் முதல்-அமைச்சருக்கும் தெரியாமல் எவ்வாறு எடுக்கப்பட்டன என்ற கேள்வியும் எழுவதாக சி.பி.ஐ.(எம்) தெரிவித்துள்ளது.இந்நிலையில், ஆகஸ்ட் 19-ந் தேதி கல்லூரி கல்வி ஆணையர் மீண்டும் கடிதம் ஒன்றை அனுப்பி, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெறுவதாக தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.எனினும், போராடும் உரிமையை கட்டுப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட அந்த உத்தரவுக்கு சி.பி.ஐ.(எம்) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுபோன்ற வழிகாட்டுதல்களுக்கு தலைமைச் செயலாளர் பொறுப்பேற்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படும் வகையிலான சம்பவங்கள் நடைபெறாததை தமிழக முதல்-அமைச்சர் உறுதி செய்ய வேண்டும் என்றும் மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு