Skip to main content
🌤️ —°C
செவ்வாய் | 18 ஆகஸ்ட் 2026 | 2 ஆவணி பராபவ வருடம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் வழியாக கண்ணூருக்கு சிறப்பு ரெயில் இயக்கம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் வழியாக கண்ணூருக்கு சிறப்பு ரெயில் இயக்கம்
ஓணம் பண்டிகையையொட்டி பயணிகளின் கூடுதல் நெரிசலை சமாளிக்கும் வகையில், பெங்களூருவில் இருந்து கேரள மாநிலத்தின் கண்ணூருக்கு சிறப்பு ரெயிலை ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.இந்த சிறப்பு ரெயில் ஆகஸ்ட் 20-ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மதியம் 12.50 மணிக்கு கண்ணூரை சென்றடையும்.வழித்தடத்தில் இந்த ரெயில் ஆகஸ்ட் 21-ஆம் தேதி அதிகாலை 2.10 மணிக்கு சேலம், 3.15 மணிக்கு ஈரோடு, 4.03 மணிக்கு திருப்பூர் மற்றும் 5.48 மணிக்கு போத்தனூர் ஆகிய நிலையங்களை அடையும்.அதேபோல், கண்ணூரில் இருந்து ஆகஸ்ட் 21-ஆம் தேதி மாலை 4.10 மணிக்கு மற்றொரு சிறப்பு ரெயில் புறப்பட்டு, மறுநாள் காலை 6 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட் சென்றடையும்.இந்த ரெயில் இரவு 9.40 மணிக்கு போத்தனூர், 10.28 மணிக்கு திருப்பூர், 11.15 மணிக்கு ஈரோடு மற்றும் நள்ளிரவு 12.05 மணிக்கு சேலம் ஆகிய நிலையங்களை வந்தடையும் என்று ரெயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு