ஒப்பிலா வீரத்துக்கு சொந்தக்காரர் ஒண்டிவீரன்: மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 255-வது நினைவு தினத்தை முன்னிட்டு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.அவர் வெளியிட்ட பதிவில், 18-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே ஆங்கிலேயப் படைகளுக்கு எதிராக துணிச்சலுடன் போராடி, அவர்களை எதிர்த்து வெற்றி கண்ட வீரர்ஒண்டிவீரன்எனகுறிப்பிட்டுள்ளார்.பூலித்தேவரின் முக்கிய போர்ப்படைத் தளபதியாக செயல்பட்டதுடன், தென்னகத்தின் விடுதலை உணர்வை வெளிப்படுத்திய தென்மலைப் போர் நாயகனாகவும் ஒண்டிவீரன் விளங்கியதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அவரது வீரமும் புகழும் என்றும் அழியாமல் மக்கள் மனங்களில் நிலைத்திருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.