ஆந்திரா, கர்நாடகாவில் இன்று பிரதமர் மோடி சுற்றுப்பயணம்; ரூ.17,900 கோடிக்கும் மேற்பட்ட வளர்ச்சி திட்டங்கள் தொடக்கம்
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 1) ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டு, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.ஆந்திரப் பிரதேசத்தில் ரூ.17,900 கோடிக்கும் அதிக மதிப்பிலான திட்டங்களை அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். இந்தத் திட்டங்களில் அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையத்தின் திறப்பு, புதிய தேசிய நெடுஞ்சாலை திட்டங்களின் தொடக்கம் மற்றும் மாநிலத்தின் முதல் செமி-கண்டக்டர் ஆலையின் அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்டவை இடம்பெறுகின்றன.இதனைத் தொடர்ந்து கர்நாடகாவின் மைசூரில் அமைக்கப்பட்டுள்ள விவேக ஸ்மரகாஇளைஞர் மையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.இந்தப் பயணத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையம் ஆராய்ச்சி, வர்த்தகம் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில், நவீன வசதிகளுடன்எதிர்காலத்தேவைகளைகருத்தில்கொண்டுஉருவாக்கப்பட்டுள்ளதாகதெரிவித்துள்ளார்.மேலும், மைசூரில் திறக்கப்பட உள்ள சுவாமி விவேகானந்தர் கலாச்சார இளைஞர் மையமான ‘விவேக ஸ்மரகம்’, 1892-ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் மைசூருக்கு மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை நினைவுகூரும் வகையில் கட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த மையத்தில் வகுப்பறைகள், நூலகம், தியான மண்டபம் மற்றும் யோகா அரங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்கும், சுவாமி விவேகானந்தரின் உயரிய சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பதிலும் இந்த மையம் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் பிரதமர் மோடி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.