Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 31 ஜூலை 2026 | 15 ஆடி பராபவ வருடம்

அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்த 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே

அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்த 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே
ஹாலிவுட் திரைப்படங்களின் இந்திய முதல் நாள் வசூல் வரலாற்றில் புதிய சாதனையை 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே' பதிவு செய்துள்ளது. இதன் மூலம் இதுவரை அந்த இடத்தை தக்க வைத்திருந்த 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' திரைப்படத்தின் சாதனை பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.கொலம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் டெஸ்டின் டேனியல் கிரிட்டோன் இயக்கியுள்ள இந்த திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இதில் டாம் ஹாலண்டு நாயகனாகவும், ஜெண்டயா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். 2021-ல் வெளியான 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்'படத்திற்குப் பிறகு சுமார் ஐந்து ஆண்டுகள் இடைவெளியில் இந்தப் படம் ரசிகர்களைச் சந்தித்துள்ளது.ஸ்பைடர்மேன் திரைப்படத் தொடரின் நான்காவது பாகமாக உருவாகியுள்ள இந்தப் படம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் திரையரங்குகளுக்கு ஈர்த்துள்ளது.
Advertisement
புதிய வில்லன்கள், பரபரப்பான சண்டைக் காட்சிகள் மற்றும் பிரம்மாண்டமான காட்சியமைப்புகள் காரணமாக உலகம் முழுவதும் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.இந்த நிலையில், வெளியான முதல் நாளிலேயே இந்தியாவில் ரூ.72.44 கோடி மொத்த வசூலைப் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வசூல் மூலம், இந்தியாவில் ஹாலிவுட் திரைப்படங்களுக்கான அதிகபட்ச முதல் நாள் வசூல் என்ற 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்'படத்தின் முந்தைய சாதனையை 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே' முறியடித்துள்ளது.முதல் நாளிலேயே இந்திய பாக்ஸ் ஆபிஸில் புதிய உச்சத்தை எட்டியுள்ள இந்த திரைப்படம், ஹாலிவுட் படங்களின் முதல் நாள் வசூல் வரலாற்றில் புதிய மைல்கல்லை உருவாக்கியுள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு