அமெரிக்காவில் இந்திய சுதந்திர தின விழா: கின்னஸ் உலக சாதனை படைத்த கொண்டாட்டம்
இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிகள் புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளன. இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நியூஜெர்சியில் கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டது.நியூயார்க் மாகாணத்தின் கீழ் உள்ள நியூயார்க், நியூஜெர்சி மற்றும் கனெக்டிகட் ஆகிய மூன்று நகரங்களை ஒருங்கிணைத்து சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.இந்திய தொழில்நுட்ப நிறுவனமான ஜோஹோவின் ஆதரவுடன் நடைபெற்ற நிகழ்வில், அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை நினைவுகூரும் வகையில் 1,300 அமெரிக்க தேசியக் கொடிகள் அமைக்கப்பட்டன.
அவற்றைச் சுற்றி இந்தியாவின் மூவர்ணக் கொடிகளும் இடம்பெற்றிருந்தன.மேலும், குயின்ஸ் பகுதியில் நடைபெற்ற அணிவகுப்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நியூயார்க் நகர மேயர் ஜோரான் மம்தானி கலந்துகொண்டார்.இந்த நிகழ்ச்சிகளில் இந்திய மற்றும் அமெரிக்க சமூகங்களைச் சேர்ந்தவர்கள், அரசியல் பிரதிநிதிகள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.