Skip to main content
🌤️ —°C
செவ்வாய் | 18 ஆகஸ்ட் 2026 | 2 ஆவணி பராபவ வருடம்

3 தமிழர்கள் கொலை: கர்நாடக விவகாரத்தில் தமிழகம் தலையிடக்கூடாது - டி.கே. சிவக்குமார்

3 தமிழர்கள் கொலை: கர்நாடக விவகாரத்தில் தமிழகம் தலையிடக்கூடாது - டி.கே. சிவக்குமார்
கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழக தலைவர்கள் சட்டசபையில் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தமிழகம் தலையிடக்கூடாது என்று கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை அருகே கோவளத்தில் 31-வது தென் மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தமிழகம், கேரளம், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் முதல்-அமைச்சர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, பாதுகாப்பு, பல்வேறு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினைகள் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளன. காவிரி உள்ளிட்ட நீர் பங்கீடு, தொகுதி மறுவரையறை, உள்கட்டமைப்பு திட்டங்கள் போன்ற விவகாரங்களும் விவாதிக்கப்பட உள்ளன.இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டி.கே. சிவக்குமார் சென்னை வருகிறார். இதன் ஒரு பகுதியாக, தமிழக முதல்-அமைச்சர் விஜய் மற்றும் டி.கே. சிவக்குமார் ஆகியோர் சென்னையில் நாளை மறுநாள் சந்தித்து பேச உள்ளனர்.இதற்கிடையே, கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
இந்த சம்பவம் தொடர்பாக தமிழக சட்டசபையில் இன்று தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததுடன், சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டி.கே. சிவக்குமார், கர்நாடக விவகாரத்தில் தமிழகம் தலையிட வேண்டாம் என்று கூறினார். எந்த மாநிலமும் மற்றொரு மாநிலத்தின் விவகாரங்களில் தலையிடக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.மேலும், ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனியான பிரச்சினைகள் இருப்பதாக கூறிய அவர், “நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள்; எங்கள் வேலையை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்றார்.தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு விவகாரங்களில் கர்நாடகா தலையிடுவதில்லை என்றும், அதேபோல் கர்நாடகாவின் சட்டம்-ஒழுங்கு விவகாரங்களில் பிற மாநிலங்களும் தலையிடக்கூடாது என்றும் டி.கே. சிவக்குமார் தெரிவித்தார். கர்நாடகாவை எவ்வாறு பாதுகாப்பது என்பது தங்களுக்கு தெரியும் என்றும் அவர் கூறினார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு