தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நேற்று சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில், இன்று தாராபுரத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண் ராஜ் உள்ளிட்ட 5 அமைச்சர்கள் பங்கேற்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதற்கு முன்பாக செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தபோதும் மின்வெட்டு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதேபோல், மதுராந்தகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்ற கூட்டத்திலும் அவர் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
Advertisement
உடனடியாக ஜெனரேட்டரை இயக்குமாறு அவர் கூறியதைத் தொடர்ந்து, ஜெனரேட்டர் இயக்கப்பட்டு அவரது பேச்சு தொடர்ந்தது. தவெக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் அடுத்தடுத்து மின்வெட்டு ஏற்பட்டது தற்போது பேசுபொருளாகியுள்ளது. இதுகுறித்து தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான புஸ்சி ஆனந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த புஸ்சி ஆனந்த், “வேண்டுமென்றே சிலர் சதி செய்கிறார்கள். அது எல்லாம் சரி செய்யப்படும்” என்று தெரிவித்தார்.