Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 24 செப்டம்பர் 2026 | 8 புரட்டாசி பராபவ வருடம்

வெஸ்ட் இண்டீஸ் தொடர்: கேரளா வந்தடைந்தார் ரோகித் சர்மா

வெஸ்ட் இண்டீஸ் தொடர்: கேரளா வந்தடைந்தார் ரோகித் சர்மா

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்க இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா கேரளா வந்துள்ளார். இன்று திருவனந்தபுரம் விமான நிலையத்தை அவர் வந்தடைந்தார். இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், வரும் செப்டம்பர் 27-ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்டு சர்வதேச மைதானத்தில் தொடங்குகிறது. இந்தத் தொடருக்கு சுப்மன் கில் இந்திய அணியின் கேப்டனாக செயல்படுகிறார். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.

Advertisement
ரோகித்துக்கு முன்பாக விராட் கோலி நேற்று திருவனந்தபுரம் வந்தடைந்தார். இதனால், ரோகித் சர்மா - விராட் கோலி கூட்டணி மீண்டும் ஒருநாள் கிரிக்கெட்டில் களமிறங்குவதை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இதனிடையே, கிரீன்ஃபீல்டு மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் முதல் ஒருநாள் போட்டிக்கான டிக்கெட்டுகள் வேகமாக விற்றுத் தீர்ந்துள்ளன. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் விளையாட இருப்பது போட்டி மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,000
🥈 Silver ₹250.00
Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு