மதுராந்தகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வீரமணி கைது விவகாரம் தொடர்பாக அவர் கூறியதாவது: “திமுக ஆட்சிக்காலத்திலேயே ஜெம் வீரமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் மூன்று முறை கால அவகாசம் கோரப்பட்டதால் நீதிபதி கண்டனம் தெரிவித்தார். நீதிபதியின் கண்டனத்துக்குப் பிறகே வழக்கு விசாரணை தீவிரமடைந்தது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்தான் வீரமணி கைது செய்யப்பட்டார். முதல்-அமைச்சரின் உத்தரவால் அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுவது தவறான தகவல். வீரமணி விவகாரம் குறித்து முதல்-அமைச்சர் விஜய் தவறான தகவலை தெரிவித்துள்ளார்.
Advertisement
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வீரமணியின் விவகாரத்தில் தவெக அரசு உடந்தையாக செயல்படுகிறது. இந்த வழக்கை தவெக அரசு அலட்சியமாக கையாண்டது. இதன் மூலம் முதல்-அமைச்சர் விஜய் அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்கிறார். சினிமாவில் நடித்தவர் என்பதால் நிஜ வாழ்க்கையிலும் நடித்துக்கொண்டிருக்கிறார். தவெக ஆட்சியில் குற்றவாளிகள் அச்சமின்றி சுற்றித்திரிகின்றனர். தவெக வேட்பாளரை எடப்பாடி விலைக்கு வாங்கியதாக ஆதவ் கூறுவது பொய்யான தகவல். சேலத்தில் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோதும் எடப்பாடி தொகுதியில் நான்தான் வெற்றி பெற்றேன்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.