விவாகரத்து வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராகாத முதல்-அமைச்சர் விஜய்... மதியம் வரை விசாரணை ஒத்திவைப்பு
தமிழக முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து மனு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.கருத்து வேறுபாடுகள் காரணமாக தம்பதியரின் திருமண உறவை சட்டப்பூர்வமாக முடிக்க வேண்டும் என்று கோரி சங்கீதா குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், விவாகரத்துடன் ஜீவனாம்சம் வழங்கவும், நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வசிக்கும் உரிமையையும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.இந்த வழக்கு முன்பு விசாரணைக்கு வந்தபோது, விஜயும் சங்கீதாவும் நேரில் ஆஜராகவில்லை. அவர்களுக்குப் பதிலாக இரு தரப்பின் வழக்கறிஞர்கள் மட்டுமே நீதிமன்றத்தில் முன்னிலையாகினர். இருவரும் பொதுமக்கள் மத்தியில் அறியப்பட்ட நபர்கள் என்பதால், பாதுகாப்பு மற்றும் நடைமுறை வசதிகளை கருத்தில் கொண்டு, காணொலி வாயிலாக ஆஜராக அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 15-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, சங்கீதாதரப்பில் ஏன் வக்காலத்து தாக்கல் செய்யப்படவில்லை என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.