Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 30 செப்டம்பர் 2026 | 14 புரட்டாசி பராபவ வருடம்

வில்வித்தையில் அசத்தல்... 3 பிரிவுகளிலும் தங்கம் வென்று வரலாறு படைத்த இந்தியா

வில்வித்தையில் அசத்தல்... 3 பிரிவுகளிலும் தங்கம் வென்று வரலாறு படைத்த இந்தியா

ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தி பதக்கங்களை குவித்து வருகின்றனர். அந்த வகையில், காம்பவுண்ட் வில்வித்தையின் ஆண்கள் அணிப் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியா - சீனா அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி 238-237 என்ற புள்ளிக் கணக்கில் சீனாவை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது. இந்திய அணியில் சாஹில், கணேஷ் மற்றும் குஷால் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கினர்.

Advertisement
இதன் மூலம் இன்று நடைபெற்ற காம்பவுண்ட் வில்வித்தையின் மூன்று பிரிவுகளிலும் இந்தியா தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. மூன்று பிரிவுகளிலும் தங்கம் வென்றதன் மூலம் இந்தியா வரலாற்றுச் சாதனையையும் படைத்துள்ளது. இதற்கு முன்னதாக நடைபெற்ற டிராப் கலப்பு இரட்டையர் (Trap Mixed Team) துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் நீரு தண்டா - கைனன் செனாய் ஜோடி தங்கப் பதக்கம் வென்றது. இதனால், இன்றைய தினத்தில் மட்டும் காம்பவுண்ட் வில்வித்தையில் 3 தங்கப் பதக்கங்களையும், துப்பாக்கிச் சுடுதலில் ஒரு தங்கப் பதக்கத்தையும் இந்தியா கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,640
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு