Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 28 அக்டோபர் 2026 | 11 ஐப்பசி பராபவ வருடம்

உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடங்கள்? - பேச்சுவார்த்தையில் தவெக தீவிரம்

உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடங்கள்? - பேச்சுவார்த்தையில் தவெக தீவிரம்

தமிழக வெற்றிக் கழகம் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக, கிராமப்புறங்கள் முதல் நகர்ப்புறங்கள் வரை பெண்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களிடமும் கட்சிக்கு இருக்கும் ஆதரவை அறிந்து கொள்வதற்கு உள்ளாட்சி தேர்தல் முக்கியமானதாக இருக்கும் என தவெக கருதுகிறது. இதனால், உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள மொத்த பதவிகளில் சுமார் 85 சதவீத இடங்களில் தங்கள் கட்சி வேட்பாளர்களையே களமிறக்க தவெக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மீதமுள்ள 15 சதவீத இடங்களை காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், கூட்டணி கட்சிகள் கூடுதல் இடங்களுடன், மேயர் பதவிகள் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளையும் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த கட்சிகளுடன் தவெக அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி, 15 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு சம்மதிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில், தவெக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவாக செயல்பட உள்ள கூட்டணி கட்சிகள், உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. மாநகராட்சிகள் மற்றும் சில நகராட்சிகளையும் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என கூட்டணி கட்சிகள் ஆலோசித்து வருவதாக தெரிகிறது.

Advertisement
ஆனால், மாநகராட்சிகளை முழுமையாக தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே தவெக விரும்புவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தவெக நிர்வாகிகள் கூறியதாவது: திமுக, அதிமுக போன்ற வலுவான கட்சி கட்டமைப்புகளைக் கொண்ட கட்சிகளை எதிர்கொள்ளும் வகையில் தவெக வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். உள்ளாட்சி தேர்தல் பணிகளை அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஒருங்கிணைத்து மேற்கொள்ள உள்ளனர். மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி அமைப்புகளில் கிடைக்கும் பதவிகள், கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவை. எனவே, வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள இடங்கள் குறித்த தகவல்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருகின்றன. கட்சிக்காக தொடர்ந்து பணியாற்றியவர்கள் மற்றும் அந்தந்த பகுதிகளில் மக்களிடையே செல்வாக்கு பெற்றவர்களுக்கு வேட்பாளர் தேர்வில் முக்கியத்துவம் அளிக்கப்படும். முதல்வர் விஜய்யின் தனிப்பட்ட செல்வாக்கை மட்டுமே நம்பி உள்ளாட்சி தேர்தலில் வாக்குகளை பெற முடியுமா என்ற கேள்வியும் கட்சிக்குள் உள்ளது. இதன் காரணமாக, ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் மக்களுடன் நேரடியாக தொடர்பில் இருப்பவர்களை வேட்பாளர்களாக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தவெக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு